பிரமாண்ட வீடு விற்பனைக்கு..? மிக மிக அவசரம்.. விட்டுட்டா மொத்தமா போய்டும்…

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இதய அறுவை சிகிச்சை முடிந்து தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனால் அவர் வகித்து வந்த துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் அமலாக்கத்துறையால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், கரூர் புறவழிசாலையில் செந்தில்பாலாஜியின் குடும்பத்தார் சார்பில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட வீட்டை விற்றுவிட செந்தில் பாலாஜி வீட்டார் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளி வந்துள்ளது.

கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அண்மையில், அமைச்சர் செந்தில்பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில், கரூரில் கட்டப்பட்டு வரும் அந்த வீட்டின் நிலத்தை சகோதரரின் மனைவி நிர்மலாவின் தாயார் பரிசுப் பத்திரம் மூலம் பரிசாக அளித்ததாகவும் புதிதாக சொத்து எதுவும் வாங்கப்படவில்லை என்றும் கூறினார்.

இதுகுறித்து சவுக்கு சங்கர் கூறிய தகவலில், அனுராதா என்பவரிடம் இருந்து 10,88,000 லட்சத்துக்கு அந்த நிலத்தை நிர்மலாவின் தாய் லட்சுமி தன் மகளுக்கு பரிசாக அளித்துள்ளார் என்றும் அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், லட்சுமி தன் மகளுக்கு பரிசாக அளிக்கும் நிலத்தின் மதிப்பு ரூ. 60,000 என்று குறிப்பிட்டிருந்ததாகவும் கூறியிருந்தார். மேலும், அதில் 50 லட்சம் அளவுக்கு பெரிய அளவிலான முத்திரை வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும் சவுக்கு சங்கர் பரபரப்பை கிளப்பினார்.

இந்த நிலையில் இன்று சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்கும் புதிதாக கட்டி வரும் அந்த வீட்டை இடத்துடன் சேர்ந்து விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளனர். அதை வாக்குபவர்களுக்காக எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். அந்த வீடு வருமான வரித்துறையினர் அல்லது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் செல்லவிருப்பதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாக சவுக்கு சங்கர் தனது ட்வீட்டில் கூறியுள்ளார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.