புதிதாக 5 வந்தே பாரத் ரயில்கள்… பெங்களூருவுக்கும் உண்டு.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு 5 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று காலை இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடியை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் பாஜக தலைவர்கள் பலர் டெல்லி விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றனர்.

அமெரிக்கா வருமாறு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து கடந்த 20 ஆம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் அமெரிக்கா சென்றார். 21 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 22 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனை சந்தித்து பரிசுகளை பரிமாறிக் கொண்டார்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை!

தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 23 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அளித்த விருந்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி. மோடியின் இந்த அமெரிக்க பயணத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதனை தொடர்ந்து எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியின் சிறப்பு அழைப்பின் பேரில் அந்நாட்டில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.

எகிப்தில் 1,000 ஆண்டுகள் பழமையான மசூதியை பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்குள்ள இந்திய வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மெலும் பிரமிடுகளையும் பார்வையிட்டார் பிரதமர் மோடி. மோடியின் எகிப்து பயணத்தில் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

சிவாஜி வீட்டு மருமகளா இவர்…. சுஜா வருணியின் ஹாட் க்ளிக்ஸ்!

5 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை 5 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்திய ரயில்வேயின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரே நாளில் ஐந்து புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மும்பைக்கு ஆபத்து… கொட்டித்தீர்க்க போகும் கனமழை.. இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை!

அதன்படி, இரண்டு ரயில்கள் மத்தியப் பிரதேசத்திலும், ஒன்று கர்நாடகாவிலும், ஒன்று பீகாரிலும், கடைசியாக மும்பை-கோவா இடையிலுமான சேவை தொடங்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை 23 ஆக அதிகரிக்கும். கர்நாடகாவின் இந்த இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு டூ ஹுப்ளி டூ தார்வாட் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.

ஏற்கனவே சென்னை மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில் இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு மற்றும் ஹுப்ளி-தார்வாட் இடையே சுமார் 490 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி 13 நிமிடங்களில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெங்களூருவில் இருந்து காலை 5:45 மணிக்கு புறப்பட்டு 11:58 மணிக்கு தார்வாட் ரயில் நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 பேர் காதலித்தார்கள்… என் குழந்தைக்கு தந்தை யார்? தூத்துக்குடி காவல் நிலையத்தில் இளம் பெண் கண்ணீர்!

இதுகுறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு ரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அதன் டிவிட்டர் பக்கத்தில் புதிய ரயில் சேவை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.