சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் படம் என வாடிவாசலை சொல்லலாம். அந்தளவிற்கு சூர்யா, வெற்றிமாறன் இணையும் படத்திற்கு கோலிவுட் சினிமாவே வெறித்தனமாக காத்திருக்கின்றனர். ஆனால் நீண்ட காலமாக இந்தப்படம் துவங்காமல் இருப்பது ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர். இந்நிலையில் ‘வாடிவாசல்’ படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்துள்ள அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நமது ஆஸ்தான நடிகர்கள் ஒரு படம் நடிக்க மாட்டார்களா என்பது தான் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவரது படங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு சமூக பிரச்சனைகள் தாங்கி வருவதால் வெற்றிமாறன் படங்களுக்கு என்றே தமிழ் சினிமாவில் தனி மவுசு உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இவரது இயக்கத்தில் அண்மையில் ‘விடுதலை’ படம் வெளியானது. சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற மிரட்டலான லுக்கில் நடித்தார். ‘அசுரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
குறைந்த பட்ஜெட்டில் துவங்கப்பட்ட ‘விடுதலை’ பட்ஜெட் பல மடங்கு எகிறியதால் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். இதனையடுத்து இந்தப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியாகி அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் அமோக வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘விடுதலை 2’ படத்திற்கான பணிகளில் இறங்கியுள்ளார் வெற்றிமாறன்.
என்னது மூன்று பாகங்களா.?: ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்த மாஸ் தகவலை பகிர்ந்த பிரபலம்.!
இவ்வாறு வெற்றிமாறன் அடுத்தடுத்த பிசியாக இருப்பதால் ‘வாடிசால்’ படம் எப்போது துவங்கும் என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இந்தப்படம் டிராப் ஆக வாய்ப்புள்ளதாகவும் அவ்வப்போது இணையத்தில் செய்திகள் கசிந்து சூர்யா ரசிகர்களை அப்செட் ஆக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் ‘விடுதலை 2’ ரிலீசுக்கு பிறகு ‘வாடிவாசல்’ துவங்கவுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறனே தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்துக்கொண்டே இருக்கிறது. லண்டனில் அணிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோ காளை ஒன்றை உருவாக்கி வருகிறோம். சூர்யா வளர்க்கும் மாட்டை ஸ்கேன் செய்து அதே போன்ற ஒரு ரோபோ காளையை உருவாக்கி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். இதனால் ‘வாடிவாசல்’ படம் துவங்குவது உறுதியாகியுள்ளதால், சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
Adipurush: ஆதிபுருஷை படு மோசமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்: பிரபாஸ் ரசிகர்கள் கொந்தளிப்பு.!