நடிகர் சிவகார்த்திகேயன் தன் தந்தையின் 70வது பிறந்த நாளையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார்.
அதில், “நடிகர் சிவகார்த்திகேயன் அப்பா என்று சொல்வதை விட, ஜி.தாஸ் அவர்களின் மகன் சிவகார்திகேயன் என்று சொல்வது தான் மேல புகைப்படத்தில் இருக்கும் நபர் டைரி நிகழ்ச்சியில், என்னிடம் அவரின் கதைகளை கதைத்தார். அந்த நபர் என்னிடம் சொல்லிய பெயர் ஜி.தாஸ்.

கோயம்பத்தூர் மத்திய சிறைச்சாலையில் ஜி.தாஸ் அவர்கள் சுப்ரெண்ட்டாக பணிபுரிந்த பொழுது, சிறைவாசிகள் மனதில் தேசிய கீதமாய் திகழ்ந்தார். என்னிடம் கதை சொன்ன நபர் கோவத்தினால் ஒரு செயலை செய்து, சிறைவாசத்தை அனுபவித்தார். சிறைக்கு அவர் செல்லும் பொழுது, படிப்பு வாசம் அவரிடம் இல்லை, ஆனால் விடுதலை ஆன பிறகு அந்த நபர் வெளியில் வரும் பொழுது, முதுகலை பட்டம் பெற்றிதிருந்தார். அதற்குக் காரணம் ஜி.தாஸ் அவர்கள்.
சிறைப்பறவைகளை என்றும் அடிக்கக் கூடாது, சிறைப்பறவைகளுக்கு நல்ல உணவும் நீரும் கொடுக்க வேண்டும், சிறைப்பறவைகளுக்குக் கல்வியைப் புகுத்த வேண்டும், இவை அனைத்தையும் செய்தார் ஜி.தாஸ். எல்லாத் தவறுகளுக்கும் இங்கு மன்னிப்புண்டு. அந்த மன்னிப்போடும் அன்பையும், கருணையும் அள்ளி அள்ளி கொடுத்தார் ஜி. தாஸ்.
Sharing our SK’s Watsapp status here
– Admin#DossAppa70thBirthday pic.twitter.com/J0vMuSRHpz
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2023
கர்நாடக மாநிலம் நமக்கு தண்ணீர் கொடுக்கவில்லை என்பதற்காக, சிறைச்சிட்டுகள் அனைவரும் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினார்கள். சிறைச்சிட்டுகளின் செயலை பார்த்து அவர்களை பாராட்டி, அன்றிரவு சிறைச்சிட்டுகளுக்கு பிரியாணி உணவை கொடுத்து மகிந்தவர். இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் சிறையில் இருக்கும் நபர்களின் குடும்பத்தில், ஏதேனும் கஷ்டம், கல்விக்கு பணம் வேண்டும், மருத்துவ செலவு வந்தால், ஜி. தாஸ் அவர்கள் அந்த குடும்பத்திற்கு தன்னுடைய சொந்த பணத்தை கொடுத்து உதவுவர். இதற்கு சாட்சி அந்தியூர் அன்புராஜ் அண்ணா” என்று தன் தந்தைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், “‘அப்பா…. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே’. நான் இன்றைக்கு என்ன செய்தாலும் அதற்குக் காரணம் நீங்கள்தான், எல்லாம் கற்றுத் தந்ததுதான். நீங்கள் வாழ்ந்த விதத்தைப் பார்த்துத்தான், நம் கையில் இருப்பதை வைத்து மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். உங்களுக்குப் பெருமை சேர்க்கும் மகனாக இருப்பேன். என்றென்றும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள் அப்பா” என்று பதிவிட்டுள்ளார்.