
மெக்ஸிகோவில் மேயர் ஒருவர், அந்நாட்டின் பழங்குடியின சடங்கின்படி மக்களுக்கு மழை, உணவு, மீன் வேண்டி பெண் முதலையைத் திருமணம் செய்திருக்கிறார்.

ட்விட்டரில், புதிய நடைமுறையாகப் பயனாளிகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை பதிவுகளைப் படிக்க முடியும் என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, Verified கணக்கு வைத்திருப்பவர் 6,000 பதிவுகள் வரை படிக்கலாம், Verified கணக்கு அல்லாதோர் 600 வரை மட்டுமே படிக்கமுடியும்.

“இம்ரான் கான் பிரதமராகப் பெரிதும் உதவி செய்தேன். ஆனால் இப்போது அதை எண்ணி வருந்துகிறேன்” என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவெத் மியான்தாத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், சிறந்த வியூ வேண்டும் என்பதற்காக அண்டை வீட்டாரின் 32 மரங்களை வெட்டிய நபருக்கு, 1.5 மில்லியன் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் 17 வயது சிறுவன் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதால் அந்நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமர் இமானுவேல் மக்ரோனுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா, உலகின் முதல் நாடாக, மன அழுத்தம் தொடர்பான நோயைக் குணப்படுத்தும் மருந்துக்காக Magic Mushrooms பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி வழங்கியிருக்கிறது.

ரஷ்யா, தன்னுடைய ராணுவத்திற்காக இந்த ஆண்டு 85 பில்லியன் டாலரைச் செலவழித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

கென்யாவில், ட்ரக் ஒன்று பல வாகனங்களில் மோதிய விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர்.

ஜெர்மனியின் பிரபல பாடி பில்டர் லிண்டர், உயிரிழந்தார். சமூக வலைதளத்தில் 8.5 மில்லியன் பேர் இவரின் கணக்கைப் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.