
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட வில்லன்
நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் .
காஷ்மீரில் நடக்கும் நமது இந்திய ராணுவத்தை பற்றி இந்த படம் பேசுகிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக ' விஸ்வரூபம்' படத்தில் நடித்த ராகுல் போஸ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது காஷ்மீரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடக்கும் என்கிறார்கள்.