12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை… கனமழையால் திணறும் கேரளா!

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழைகேரளாவில் தென்மேற்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. இந்த பருவமழை சீசனில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் நேற்று முதல் முறையாக கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இடுக்கி, கண்ணூர், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.​ நாடோடிகள் ஹீரோயினா இது… அடையாளமே தெரியாமல் மாறிப்போன அனன்யா!​

ஆரஞ்ச் அலர்ட்இதனால் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில் புதன்கிழமையான இன்று திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.
​ மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவா இவர்… பேரழகி… சூப்பர் ஹீரோயின் ரெடி!​அணைகள் திறப்புகனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பல்வேறு அணைகள் திறக்கப்பட்டுள்ளன. பத்தனம்திட்டாவில் மணியார் அணை திறக்கப்பட்டுள்ளதால் பம்பை மற்றும் கக்கட்டாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் உள்ள கல்லாகுட்டி அணையின் 2 ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பாம்பிளா அணை விரைவில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரியாறு மற்றும் முத்திரப்புழா கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.​ வாக்கிங் போனவர்கள் மீது பயங்கரமாக மோதிய கார்… தாய் மகள் உட்பட 3 பெண்கள் பலி.. பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி!​
கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறைகனமழை காரணமாக கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்கள் மற்றும் குட்டநாடு தாலுகாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தில்ர கல்லூரிகள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி., கண்ணூர் மற்றும் தொழில்நுட்ப (கே.டி.யு.) பல்கலைக்கழகங்களில் இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் மாற்றப்பட்டுள்ளன.
​ திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில்… சென்னையில் இருந்து இனிமே எவ்ளோ நேரம் தெரியுமா?​பொதுமக்களுக்கு எச்சரிக்கைகேரளாவில் கனமழை பெய்து வருவதால், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ள ஆபத்து உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடுக்கியில் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.​ சிதம்பரத்தில் அரங்கேறிய கொடூரம்… திருமணமான 2 மாதத்தில் கர்ப்பிணி மனைவியை பிளேடால் அறுத்து கொன்ற கணவன்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.