சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்
தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டின் இலச்சினை வெளியிடப்பட்டது. இதற்கு வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி,
கழக நிர்வாகிகள் எடுத்த சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 75 நாட்களில் 1.60 கோடி உறுப்பினர்களை சேர்த்த இயக்கமாக அதிமுக திகழ்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை. இதன்மூலம் அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறோம். தற்போது தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட இயக்கம் அதிமுக மட்டுமே. எனவே அதிமுக உடையவும் இல்லை, சிதறவும் இல்லை. ஒரே இயக்கமாக இருக்கிறது.
அதிமுகவை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எங்களின் மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளனர்.