Tamanna: 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' -வில் நடிக்க தமன்னா வாங்கிய சம்பளம் இவ்வளவா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தமன்னா, இங்கு மார்கெட் டல்லடிக்க துவங்கியதும் பாலிவுட்டிற்கு தாவி விட்டார். அங்கு இவர் நடித்துள்ள இரண்டு வெப்சீரிஸ்களுமே பரபரப்பை கிளப்பி வருகிறது. முத்த காட்சியில் கூட நடிக்க மறுத்து வந்த அவர், தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அண்மையில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அருணிமா ஷர்மா இயக்கத்தில் வெளியான வெப்சீரிஸ் ‘ஜீ கர்தா’. இந்த தொடரில் மேலாடையின்றி உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்து பரபரப்பை கிளப்பினார் தமன்னா. அவரின் இந்த எல்லை மீறிய கிளாமரை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சியடைந்து விட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே தமன்னாவின் இரண்டாவது வெப்சீரிஸ் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெளியாகிவிட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதில் முத்தக்காட்சி, விஜய் சர்மாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார் தமன்னா. முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு முத்தக்காட்சிகளில் கூட நடிக்க மாட்டேன் என தெரிவித்திருந்தார் தமன்னா. தற்போது அந்த விதியை தானே மீறியதை கூறித்து விளக்கமளித்த அவர், ‘2023 ஆம் ஆண்டிலும் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என ஏன் மற்றவர்கள் கூற வேண்டும். என்னைப்பற்றி விமர்சிப்பவர்களை நான் கண்டுகொள்ளப் போவதில்லை.

எனது 18 வருட திரை வாழ்க்கையில் படுக்கையறை மற்றும் முத்த காட்சிகளில் நடிக்க கூடாது என நான் விதிகளை போட்டு கொண்டது உண்மை தான். ஆனால் அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த விதிகளை மீற வேண்டும் என நான் புரிந்து கொண்டேன். அதனால் தான் நான் போட்ட விதிகளை நானே மீறி நடித்தேன் என சர்ச்சைகளுக்கு விளக்கமளித்து இருந்தார்.

Vishal: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து நடிகர் விஷால்.!

இந்நிலையில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ தொடரில் நடிக்க தமன்னா 7 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக 5 கோடி சம்பளம் வாங்கும் அவர், இந்த தொடரில் நடிக்க 7 கோடி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுக்குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமன்னா தற்போது தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில் தமன்னா டான்ஸ் ஆடியுள்ள ‘காவாலா பாடல் அண்மையில் வெளியான நிலையில் யூடிப் டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Maamannan: ‘மாமன்னன்’ படக்குழுவின் சூப்பர் பிளான்: எகிற போகும் வசூல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.