Maamannan: மாமன்னன் இன்டர்வெல் சீன்.. எங்க பிளானே வேற: மாரி செல்வராஜ் பகிர்ந்த சீக்ரெட்..!

அண்மையில் வெளியான ‘மாமன்னன்’ படம் பலரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தின் சக்சஸ் மீட் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்நிகழ்வில் இயக்குனர் மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

வடிவேலு,
உதயநிதி ஸ்டாலின்
, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மாமன்னன்’ படம் உருவானது. பக்ரீத் வெளியீடாக கடந்த 29 ஆம் தேதி வெளியானது இந்தப்படம் . தனது கடைசி படத்தினை மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் ‘மாமன்னன்’ படத்தில் கமிட் ஆனார் உதயநிதி.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்படி அவரின் கடைசி படமாக வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் இதுவரை இல்லாத அளவிற்கு உதயநிதியின் கெரியரில் அதிக வசூல் செய்துள்ளது. மேலும் இந்தப்படத்தில் வடிவேலுவின் நடிப்பை கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். இந்தப்படம் தான் அவரின் உண்மையான கம்பேக் என ரசிகர்கள் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தின் வெற்றி கொண்டாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடிவேலு, மாரி செல்வராஜ், உதயநிதி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்துக்கொண்டு இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் பெரிதும் பேசப்பட்டு வரும் இடைவேளை காட்சி குறித்து பேசினார்.

Leo: ‘நன்றி அண்ணா’… ‘லியோ’ விஜய் பற்றி சூப்பரான மேட்டர் சொன்ன லோகேஷ் கனகராஜ்.!

அப்போது, அந்தக்காட்சி உண்மையில் முதலில் வீட்டில் கண்ணாடியில் சூழப்பட்ட அறையில் நடப்பதாக இருந்தது. அப்பாவை உட்கார வைத்தவுடன் அதிவீரன் அந்த வீட்டைவே சூறையாடுவதாக பிளான் பண்ணி இருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் செட் ரெடியாகவில்லை. அதனால் நாங்கள் வெளியில் படமாக்க வேண்டியதாகிவிட்டது. அதுவும் நல்லது தான்.

அந்த இடத்தில் பேசும் வசனங்கள் எல்லாம் ஷுட்டிங் ஸ்பாட்டில் எழுதப்பட்டது. மாமன்னன், ரத்னவேல் இருவரும் தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை பேச வேண்டும் என்ற அந்த புள்ளியில் யோசித்து எழுதினோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவ்விழாவில் ‘மாமன்னன்’ பட வசூல் குறித்து பேசிய உதயநிதி, படம் 9 நாட்களில் ரூபாய் 52 கோடி வசூலித்துள்ளதாகவும், அவரின் கெரியரில் இதுதான் பெஸ்ட் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush: தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.