டாஸ்மாக்கில் "குவார்ட்டர் கட்டிங்".. திருமாவளவன் சொன்னத பாருங்க.. குமுறும் நெட்டிசன்ஸ்

சென்னை:
டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை செய்யப்படவுள்ளது தொடர்பாக கேள்வி கேட்டதுமே, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.

செய்த காரியத்தை வைத்து அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 90 மி.லி. கட்டிங் கொண்ட டெட்ரா பாக்கெட் மதுபானம் விரைவில் விற்பனை செய்யப்படவுள்ளது. மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், புதிய புதிய வடிவங்களில் மதுபானங்களை அரசு அறிமுகப்படுத்துவதற்கு கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஏற்கனவே மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்தும், குற்றச்செயல்கள் அதிகமாகியும் வரும் நிலையில், இளைஞர்களை மேலும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கும் இந்த டெட்ரா பாக்கெட் மதுபானம் தேவைதானா எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளும் அதற்கு அவர் கூறிய பதில்களையும் இங்கு பார்க்கலாம்.

கேள்வி:
மகளிர் உரிமைத் தொகை என்பது முதலில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், இப்போது தகுதி அடிப்படையில் தான் வழங்கப்படும் என அரசு கூறுகிறதே..?

திருமா:
எந்தவொரு திட்டமாக இருந்தாலும் கூட அதற்கென சில வரையறைகளை உருவாக்குவார்கள். அப்படிதான் இந்த திட்டத்திலும் வரையறைகள் இருக்கிறது. முழுமையான வரையறைகள் வந்த பிறகு இதுகுறித்து கருத்து சொல்கிறேன்.

கேள்வி:
இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்காது என அண்ணாமலை கூறுகிறாரே?

பதில்:
அரசுக்கு எதிராக ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணாமலை இவ்வாறு கூறுகிறார். தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை அவர் வைத்து வருகிறார். இந்த திட்டம் இந்திய அளவிலேயே பல கட்சிகள் பின்பற்றும் திட்டம். கர்நாடகாவில் கூட இந்த திட்டத்தை வாக்குறுதியாக கொடுத்துதான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பான திட்டம் இது.

கேள்வி:
டாஸ்மாக் கடைகளில் கட்டிங் மட்டுமே கொண்ட டெட்ரா மதுபானங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
அது பற்றி எனக்கு தெரியவில்லையே. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கொள்கை. எனவே இதுகுறித்து கருத்து சொல்வதற்கு எதுவுமில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென சென்றார் திருமாவளவன்.

மற்ற கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக பதிலளித்த திருமாவளவன், டாஸ்மாக் பற்றிய கேள்வியை கேட்டதுமே பதற்றம் அடைந்து நழுவுவதற்கு என்ன காரணம் என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.