எடப்பாடி பழனிசாமி விட்ட தூது: ஓபிஎஸ் அணியில் மனமாற்றம் – தேர்தலுக்கு முன்னர் இணைப்பு?

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உட்கட்சிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. கடந்த 2022 ஜூலை மாதம் 11ஆம் தேதி ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட எடப்பாடி பழனிசாமி, நேற்று (2023 ஜூலை 11) மன்னிப்பு கடிதம் கொடுத்தால் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணையலாம் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம்!அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றுதான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கோஷங்கள் வைக்க கடந்த ஆண்டு மே மாதத்திலேயே உட்கட்சி பிரச்சினை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. அதற்கு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது தேர்தல் ஆணையமே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அங்கீகாரம் அளித்துவிட்டதால் வருகிறவர்கள் வரலாம் என்று அறிவிப்பு வெளியிடுகிறார் என்கிறார்கள் அதிமுக உள் விவகாரம் அறிந்தவர்கள்.
ஓபிஎஸ் தரப்பில் என்ன நடக்கும்?ஓபிஎஸ் தரப்பில் என்ன நடக்கும் என்பது குறித்து அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்தோம். “இந்த அறிவிப்பை பார்த்த உடன் ஓபிஎஸ்ஸோ, அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் அகியோரோ நேராக எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து மன்னிப்பு கடிதம் கொண்டு போய் கொடுக்கப் போவதில்லை. ஆனால் அவர்களை நம்பிச் சென்றவர்கள் உடனடியாக தாய்க்கழகம் திரும்புவார்கள்.
ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு குறி!ஓபிஎஸ்ஸின் கொள்கை, கோட்பாடு, லட்சியம் மேல் கொண்ட பற்றினால் யாரும் அவர் பின்னால் செல்லவில்லை. அவர் அதிகாரத்தை கைப்பற்றினால், அதன் சிறிய பகுதி தங்களுக்கும் கிடைக்கும் என்றே சென்றிருக்கலாம். அப்படியிருக்க முழு கட்சியும், அதிகாரமும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டதால் ஓபிஎஸ்ஸை நம்பிச் சென்ற கீழ் மட்ட நிர்வாகிகள் மீண்டும் அதிமுக பக்கம் திரும்புவார்கள்.
ஓபிஎஸ் எதிர்காலம் என்ன?ஓபிஎஸ்ஸுக்கோ, அவர் உடன் நிற்பவர்களுக்கோ அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும். தனியாக ஒரு அமைப்பை தொடங்குவது சாத்தியமாகாது. எனவே பாஜகவுடனோ, டிடிவி தினகரனின் அமமுகவுடனோ இணைந்தால் மட்டுமே அரசியலில் நீண்ட நாள்கள் பயணிக்க முடியும். இரண்டில் எந்த பக்கம் சாய்ந்தாலும் ஓபிஎஸ் இரண்டாம் கட்ட நபராகாவே இருப்பார்.
எடப்பாடியுடன் இணக்கம்!அதற்கு எடப்பாடி பழனிசாமியுடன் ராசியாகி இந்த பக்கம் வந்துவிட்டால், பழைய செல்வாக்கு அவருக்கு மீண்டும் கிடைக்கும். ஏனெனில் பாஜகவோ, அமமுகவோ தமிழகத்தில் இன்னும் கால் ஊண்றிவிடவில்லை. அப்படியிருக்க அதிமுக அவருக்கு நல்ல ஆப்ஷனாக இருக்கும். இது சாத்தியமா என்றால், அரசியலில் எதுவும் சாத்தியம் என்றுதான் கூற வேண்டும்.
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு சாத்தியமா?​​
சசிகலாவுக்கு எதிராக ஜெயலலிதா மரண விவகாரத்தை எழுப்பி பின்னர் அவர் மேல் உள்ள பழியை போக்கத்தான் விசாரணை வேண்டும் என்று கேட்டேன் என்று சொன்னவர் தான் ஓபிஎஸ். அவரே தான் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொடநாடு விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்கிறார். இன்னும் தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கின்றன. காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்” என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.