கரண்ட் பில் தப்பு தப்பா வருதா? இதோ ப்ளுடூத் மீட்டர்… Tangedco இனி வேற மாறி ரீடிங்!

தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை மலிவான விலையில் நுகர்வோருக்கு வழங்கும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) செயல்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்போது பயன்பாட்டில் உள்ளது. மேலும் 100 யூனிட் வரை பயன்படுத்தினால் கட்டணம் இல்லை என்ற திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

​மின் கணக்கீட்டில் குளறுபடிஇந்த சூழலில் மின் கட்டண கணக்கீட்டில் குளறுபடிகள் நடப்பதாக நுகர்வோர்கள் சிலர் புகார் தெரிவிக்கின்றனர். மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏதும் இல்லாத நிலையில், பல நூறு அல்லது பல ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வருகிறது. நாங்கள் செலுத்தும் சராசரி கட்டணத்தை விட அதிகமாக காட்டுகிறது. அப்படி நடக்க வாய்ப்பே இல்லை.​நுகர்வோர்களுக்கு பெரும் சுமைமின் கணக்கீட்டில் பிரச்சினை இருப்பதாக முன்வைக்கப்படும் புகார்களை அவ்வப்போது பார்க்க முடிகிறது. தவறுகள் சரிசெய்யாவிடில் பெரும் தொகையை கட்டணமாக செலுத்துவது நுகர்வோர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடுகிறது. ஒருவழி மின்வாரிய அலுவலகத்திற்கு நடையாய் நடந்து பிரச்சினைகளை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டால் சில மாதங்களுக்கு பின்னரே சரியான மின் பயன்பாட்டை கண்டறிகின்றனர்.
Tangedco புதிய முயற்சிஅதற்குள் படாத பாடு பட வேண்டியதாய் இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் Tangedco புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. வீடுகளில் ப்ளுடூத் மீட்டர்கள் (Bluetooth meters) பொருத்தி கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளனர். முதலில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தி, அதன் முடிவுகளை ஆராய்ந்து பின்னர் விரிவுபடுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
ப்ளுடூத் மீட்டர்கள் பயன்பாடுஅந்த வகையில் சென்னையில் உள்ள மடிப்பாக்கம், கவுரிவாக்கம் பகுதிகளில் மின் கணக்கீட்டாளர்கள் பற்றாக்குறையாக இருக்கும் பகுதிகளில் முதல்கட்டமாக ப்ளுடூத் மீட்டர்கள் பயன்பாட்டை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். மேலும் எந்தெந்த பகுதிகளில் மின் கணக்கீடு புகார்கள் அதிகம் வருகிறதோ, அங்கும் ப்ளுடூத் மீட்டர்களை பொருத்தி பரிசோதிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.​செல்போனில் பார்க்கலாம்இவ்வாறு ப்ளுடூத் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டால், அதனை ப்ளுடூத் அப்ளிகேஷன் மற்றும் ஃபைபர் ஆப்டிக் போர்ட்கள் மூலம் கண்காணிக்கலாம். அதாவது தொலைவில் இருந்தபடியே மின்சார பயன்பாடு எவ்வளவு, அதற்கான தொகை உள்ளிட்டவற்றை கணக்கிடலாம். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்போனில் தானாகவே தெரியும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
உடனுக்குடன் சர்வரில் பதிவேற்றம்அதுமட்டுமின்றி இந்த தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் Tangedco சர்வரிலும் தானாக பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். இதன்மூலம் நேர விரயம் தவிர்க்கப்படும். மின் கணக்கீட்டாளர்களின் பணி குறைக்கப்படும். தவறுகள் நேராது. சரியான மின் கட்டணத்தை கண்டறியலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
​ஆகஸ்ட் மாதம் முதல்தற்போது சோதனை ஓட்ட முறையில் இருந்தாலும் அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர். வரும் ஆகஸ்ட் மாதம் ப்ளுடூத் மீட்டர் திட்டம் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்டு விடும் என மின்வாரிய அதிகாரிகள் தரப்பு கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.