Sivakarthikeyan: தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா ? அடேங்கப்பா..!

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை குவித்து மளமளவென முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பிடித்தவர் தான் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் துவங்கிய இவரது திரைப்பயணம் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகின்றது. என்னதான் இடையிடையே சில சறுக்கல்களை சந்தித்தாலும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி வருகின்றார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் அஸ்வினின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. டாக்டர் மற்றும் டான் படங்களை போல இப்படமும் நூறு கோடி வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிவகார்த்திகேயனின் மாவீரன்

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் திரைப்பயணத்தில் நடிகர் தனுஷை பின்தொடர்ந்து வருவதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் தனுஷ் வாத்தி என்ற படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்தில் நடித்தார். அதே போல சிவகார்த்திகேயனும் பிரின்ஸ் என்ற நேரடி தெலுங்கு படத்தில் நடித்தார்.

Vidaamuyarchi: ஷூட்டிங் முதல் அஜித்தின் கெட்டப் வரை..ஒருவழியாக வெளியான விடாமுயற்சி படத்தின் அப்டேட்..

மேலும் தனுஷ் பாலிவுட் படங்களிலும் தற்போது அதிகளவில் நடிக்க கமிட்டாகி வருவது போல சிவகார்த்திகேயனும் பாலிவுட் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். விரைவில் சிவகார்த்திகேயன் பாலிவுட் படத்தில் நடிப்பார் என்றும் ,அதன் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தனுஷிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் மறைமுகமாக போட்டி இருப்பதாக பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையா இல்லை வெறும் வதந்திதானா என்பது பற்றி தெரியவில்லை. இருந்தாலும் சிவகார்த்திகேயன் தனுஷை பின்தொடர்வது போல சிலருக்கு தெரிகின்றது.

பாலிவுட்டில் சிவகார்த்திகேயன்

அதன் காரணமாகவே தான் சிலர் தனுஷை சிவகார்த்திகேயன் காப்பி அடித்து வருவதாக கமன்ட் செய்து வருகின்றனர். மேலும் தனுஷை போல சிவகார்த்திகேயனும் தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களை தயாரிக்கவும் செய்தார். மேலும் பாடலாசிரியர், பாடகர் என சிவகார்த்திகேயன் எடுத்த அவதாரங்கள் தனுஷ் ரசிகர்களிடம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் போட்டி நடிகர்கள் என்பது போல பாவித்து சிலர் பேசி வருகின்றனர். ஆனால் இதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பது பற்றி தெரியவில்லை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.