சந்தையில் காணப்படுகின்ற “போலித் தேனுக்கு பதிலாக சுத்தமான தேன் பாணிகளை நுகர்வோருக்கு வழங்குதல்” என்ற குறிக்கோளில் கெபிதிகொல்லாவ கலவல கிராமத்தில் தேனி பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றுள்ளது.
கெபிதிகொல்லாவ பிரதேச செயலகத்தின் கலவல 30 கிராமத்தின் மக்களுக்கு தேனி பெட்டி வழங்கல் மற்றும் பயிற்சி நிகழ்ச்சி அனுராதபுர மாவட்ட செயலாளர் ஜனக ஜயசுந்தர தலைமையில் (14) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட செயலாளர் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இம்முயற்சியானது முழு நாட்டிற்கும் முன்னுதாரணம் எனத் தெரிவித்தார். அவ்வாறே இந்நிகழ்ச்சித் திட்டத்திற்காக சகல சமூக மக்களும் ஒன்றிணைந்து வெற்றிகரமாக செயற்படுகின்றனர். இலவசமாக கிடைக்கும் இத்திட்டத்தை தமது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் போது நாட்டின் முன்னேற்றமும் கருத்திற் கொள்ளப்படும். சந்தையில் பாரிய கேள்வி சுத்தமான தேனிற்குக் காணப்படுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இது ஒவ்வொருவராலும் மேற்கொள்ளக்கூடிய வியாபாரம். அனுராதபுர மாவட்டத்தில் இதற்கான பாரிய வாய்ப்புக்கள் காணப்படுவதுடன் இளைஞர்கள் இதில் ஈடுபடுவதன் ஊடாக தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மாவட்ட செயலாளர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச செயலாளர் பிரிவுகள் நான்கில் இதுவரை தேனி பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்று வருகின்றது. பொதுவாக 140 குடும்பங்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கெபிதிகொல்லாவ பிரதேசத்தில் மாத்திரம் 30 குடும்பங்கள் பங்குபற்றுகின்றன.;
இத்தேனி பராமரிப்புத் திட்ட ஒருங்கிணைப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சுமித் ரத்நாயக்கவின் முயற்சியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.