சென்னை: நடிகை நிவேதிகா சதீஷ் கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2017ம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தான் நிவேதிதா சதிஷ். தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் நிவேதிதா சதீஷ். இவர் ஹீரோயினாக நடித்த முதல் திரைப்படம் படம் சில்லுக்கருப்பட்டி.
ஆந்தாலஜி திரைப்படமான சில்லுக்கருப்பட்டி படத்தில், மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தை ஹலிதா ஷமீம் இயக்கியிருந்தார். நான்கு வித்தியாசமான கதையைக் கொண்ட இந்த சில்லுக்கருப்பட்டி ஆந்தாலஜி திரைப்படத்தை அனைவரும் பாராட்டினார்கள்.
சில்லுக்கருப்பட்டி: சில்லுக்கருப்பட்டி படத்துக்கு பிறகு நடிகை நிவேதிதா சதீஷுக்கு ஜாக்பாட் அடித்தது என்று சொல்லும் அளவுக்கு, அடுத்தடுத்த படங்களில் புக்காகி நடித்து வருகிறார். தற்போது, இவரின் கைவசம் இந்த நிலை மாறும், செத்தும் ஆயிரம் பொன், உடன்பிறப்பே என படங்கள் குவிந்துள்ளன. இதையடுத்து, சுழல் என்ற த்ரில்லர் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இந்த வெப் தொடருக்கும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
கேப்டன் மில்லர்: இப்போது நிவேதிதா சதீஷ் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் குமார் இசையத்துள்ளார். முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தீப் கிஷனும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படவாய்ப்புக்காக இப்படியா: இந்நிலையில், நிவேதிகா சதீஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினியில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் முழுவதும் கவர்ச்சி தெரியாதபடி லாங் சாட் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பேன்ஸ், சில்லுகருப்பட்டியில் ஹோம்லியான லுக்கில் ரசிகர்களை கவர்ந்த நடிகையா இவர் என்றும், கவர்ச்சி இருக்கு ஆனா இல்ல என்றும், படவாய்ப்புக்காக இப்படியா என்றும் கேட்டு வருகின்றனர்.