Leo Update: `லியோ ஆடியோ லான்ச் எப்போது? கோவை வருகிறாரா விஜய்!' – சஸ்பென்ஸ் வைத்த லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது விஜய், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சென்னை செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. அது மாற வேண்டும். தளபதி சூப்பராக இருக்கிறார்.  லியோ குறித்து அடுத்து பெரிய அப்டேட் இருக்கிறது என்றார். அதையடுத்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்படி அவர் அளித்த பதில்கள் சில…

* வாய்ப்பு கிடைத்தால் அஜித் சாரை வைத்து படம் எடுப்பேன்.

* லியோ LCUவா இல்லையா என்று சொல்ல 3 மாதம் காலம் இருக்கிறது.

*அடுத்தப் படம் முடித்த பிறகு கைதி 2 எடுக்கவுள்ளேன். 

லோகேஷ் கனகராஜ்

*இரும்புக்கை மாயாவி 10 வருடமாக எழுதிய கதை. இது தான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட்.  

*தளபதி பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. எத்தனையே நடிகர்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். ஆனால்  அண்ணன் என்றழைக்க நினைக்க வைத்தவர் விஜய் மட்டும் தான்.

*லியோ செகண்ட் சிங்கிள் வெளியாக லேட் ஆகும்.

*எனக்கும் லவ் ஸ்டோரிக்கும் செட் ஆகாது என்று நீங்கள் எப்படி முடிவு செய்யலாம். லியோ படத்தில் த்ரிஸா மேடத்திற்கு ஒன்றும் ஆகாது.” என்றார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ், “லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்துள்ளது. படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். நடிகர் கார்த்தி கூறியது போல சமூகம் சார்ந்த பணிகள் செய்ய எல்லோரும் முன்வர வேண்டும். மேலும்  இரும்புக்கை மாயாவி படம் இப்போதைக்கு எடுக்க முடியாது.

லோகேஷ் கனகராஜ்

அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. பத்து படம் முடித்துக் கொண்டு என் சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். லியோவில் அரசியல் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் இல்லை. விஜயுடன் மூன்றாவது படத்தில் இணைய காத்திருக்கிறேன். அவர் கண் இமைத்தால் படம் செய்திடுவேன்.

சினிமாவுக்காக150 ரூபாய்க்கு கொடுக்கும் ரசிகரின் மரியாதை மிகப் பெரியது. நான் எடுப்பது கமர்சியல் சினிமாதான். லியோ ரூ.1,000 கோடி வசூல் ஈட்டுமா என்ற கருத்தைத் தாண்டி எனக்கு ரசிகர் கொடுக்கக்கூடிய 150 ரூபாய் முக்கியம். சமூக வலைதளங்களில் வெளியாகும் படங்களை ஒன்றும் செய்ய முடியாது. எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் படத்தை பகிர்கிறார்கள்.

‘லியோ’

ஆனால், அதற்கு பின்பு ஏராளமான மக்களின் உழைப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால், இப்படி செய்ய மாட்டார்கள்.  செப்டம்பர் மாதம் லியோ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடக்கும். ஏதாவது செய்து விஜயை கோவை அழைத்துவர முயற்சி செய்கிறேன்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.