மாமன்னன் வடிவேலுவை வைத்து மாஸ்டர் பிளான் போட்ட கமல்ஹாசன்.. அடுத்து இப்படியொரு படம் ரெடியாகப் போகுதா?

சென்னை: விக்ரம் படத்தின் விஸ்வரூப வெற்றிக்குப் பின்னர், செம எனர்ஜியுடன் பல படங்களை வரிசையாக கமிட் செய்தும் இளம் நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்தும் வருகிறார் கமல்ஹாசன்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 விரைவில் வெளியாக உள்ள நிலையில், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சிக்கே பறந்து சென்றிருக்கிறார்.

அடுத்து அ. வினோத் இயக்கத்தில் படத்தில் நடிக்க உள்ள கமல், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் 3 படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

சிம்பு, சிவகார்த்திகேயன் படங்கள் தயாரிப்பு: இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தை தனது ராஜ்கமல் பேனரில் 100 கோடி பட்ஜெட்டில் உலகநாயகன் கமல் தயாரிக்க உள்ளார்.

அடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து வரும் ராணுவ வீரர் தொடர்பான படத்தையும் காஷ்மீரில் பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார் கமல்.

Kamal Haasan plans a political movie for Vadivelu?

காமிக்கானில் கமல்: ஹாலிவுட் பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட காமிக் கான் நிகழ்ச்சியில் இந்திய நடிகர்களான பிரபாஸ், கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோன் ப்ராஜெக்ட் கே படத்திற்காக சென்றுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், க்ளிம்ப்ஸை வெளியிட்டு ரசிகர்களை மிரட்ட இயக்குநர் நாக் அஸ்வின் காத்திருக்கிறார்.

Kamal Haasan plans a political movie for Vadivelu?

வடிவேலுவை வைத்து அரசியல் படம்: இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவை வைத்து அரசியல் படமாக மாமன்னன் படத்தை இயக்கியதை பார்த்து வியந்து போன கமல்ஹாசன், வடிவேலுவுக்குள் இப்படியொரு திறமை இருப்பதை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்து விட்டாராம்.

இதை இப்படியே ஒரு படத்துடன் நின்று போக விடாமல், அவரை வைத்து இன்னொரு அரசியல் படத்தையும் எடுத்து விடலாம் என்கிற முயற்சியில் கமலே வடிவேலுவுக்காக ஒரு அரசியல் படத்திற்கு கதையை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Kamal Haasan plans a political movie for Vadivelu?

குழப்பத்தில் வடிவேலு: மாமன்னன் படம் வடிவேலுவின் இமேஜை உச்சத்துக்கு கொண்டு சென்ற நிலையில், அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் காமெடியனாக காட்சியளிக்கப் போவதை நினைத்தே ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம் வடிவேலு.

இந்நிலையில், தேவர் மகன் படத்தில் இசக்கியாக நடிக்க வாய்ப்பு தந்த கமலே தனக்காக அரசியல் படம் ஒன்றை உருவாக்கி வருகிறாரே இனிமேல் காமெடியனாக தொடர்வதா அல்லது இப்படி குணசித்ர நடிகராகவே மாறிவிடுவதா என்கிற குழப்பத்தில் வடிவேலு உள்ளார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.