IND vs WI: இந்த பிட்சில் 20 விக்கெட்டுகளை எடுப்பது கஷ்டம்: பராஸ் மஹாம்பரே

இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 209 ரன்கள் பின்தங்கியுள்ளனர். இது குறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்பரே, இந்த பிட்சில் 20 விக்கெட்டுகளை எடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் வரும்போது நிச்சயம் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

பராஸ் மஹாம்பரே கணிப்பு 

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மகாம்பரே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது,  ஆடுகளம் மிகவும் மெதுவாகவும், பேட்டிங்கிற்கு மிகவும் எளிதாகவும் உள்ளது. 3வது நாள் ஆட்டத்தின் முடிவில், கொஞ்சம் மாற தொடங்கயிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் மிகவும் தற்காப்பு அணுகுமுறையை கடைபிடித்தது. பேட்ஸ்மேன் ஷாட் ஆட முயலும் போது, ​​விக்கெட் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்கள் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளவில்லை. இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். என்ன வாய்ப்புகள் கிடைத்தாலும் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

20 விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினம்

டெஸ் போட்டிகளுக்கு ஆடுகளம் விறுவிறுப்பாக இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சமநிலை இருக்க வேண்டும். டொமினிகாவின் ஆடுகளம் அப்படி தான் இருந்தது. அதனை நாங்கள் சிறப்பாகப் பயன்படுத்தினோம். இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை எடுப்பது கடினம். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் முகேஷ் குமாரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. முதல் செஷனில் அவரின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. இரண்டாவது அமர்வில், அவர் பந்தை சிறிது நகர்த்தினார். இது ஒரு நல்ல முயற்சி” என்று கூறினார். 

ஆகாஷ் சோப்ராவும் கேள்வி 

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான ஆகாஷ் சோப்ரா பேசும்போது பிளாட் மற்றும் டெட் பிட்ச்களை டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகப்பெரிய எதிரி என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.