சென்னை: Edhirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர் மாரிமுத்துவின் பேச்சு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
வசந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மாரிமுத்து. அதுமட்டுமிண்றி பாடலாசிரியரான வைரமுத்துவிடமும் சில வருடங்கள் பணியாற்றினார். அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைப் பெற்றன. அதனையடுத்து மிஷ்கினின் வற்புறுத்தலின்பேரில் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.
சிறந்த குணச்ச்சித்திர நடிகர்: யுத்தம் செய் படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர், கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் கலக்கும் மாரிமுத்து: பெரிய திரையில் இப்படி பல நடிகர்களுடன் நடித்து புகழடைந்திருந்தாலும் அவரை வெகுவாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது சின்னத்திரைதான். சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். ஆணாதிக்க சிந்தனையுடனும், எப்போதும் திமிராகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்த அந்த கேரக்டரை மாரிமுத்து தனது நடிப்பின் மூலம் உச்சக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.
ஃபேமஸான மாரிமுத்து: குறிப்பாக அவர் தொண்டையை செருமுவதும், ஏய் இந்தாமா என்ற வசனமும் சமூக வலைதளங்களில் வெகு பிரபலம். பலர் அதை மீம்களுக்காகவும் பயன்படுத்திவருகின்றனர். இதனால் மாரிமுத்து பெரும்பாலும் இணையத்தில் ட்ரெண்டிங் டாபிக்கில் இருப்பார். தற்போது அவரது பேச்சு ஒன்று மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன பேசினார்?: தனியார் சேனல் ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மாரிமுத்து. அது ஜோதிடர்கள் vs ஜோதிடத்தை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் நடந்தது. அப்போது பேசிய மாரிமுத்து, “இந்தியாவை பின்னோக்கி இழுப்பதே இந்த ஜோதிடக்காரர்கள்தான். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் முதல்வராக முடியாது என இந்தியாவில் உள்ள ஜோசியக்காரனும் சொன்னான். ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டார். இப்போது முகத்தை தூக்கி எங்கே வைத்துக்கொள்வீர்கள்.
ரஜினி மட்டும் ஏன் சூப்பர் ஸ்டார்?: ரஜினிகாந்த் பிறந்த நொடியில் இந்தியாவில் 57,000 குழந்தைகள் பிறந்தனர். ஏன் ரஜினிகாந்த் மட்டும் சூப்பர் ஸ்டார் ஆனார். ஏனென்றால் அவர் உழைத்தார் அதனால் சூப்பர் ஸ்டார் ஆனார். எந்த ஜோதிடக்காரனாவது சுனாமி வரும் என்று சொன்னாரா?, கொரோனா வரும் என்று சொன்னாரா? வந்த பிறகு எதையாவது சொல்லக்கூடாது என கூறினார்.
ஏய் சும்மார் உட்காருயா?: அந்த சமயத்தில் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஒரு ஜோதிடர் வீராவேசமாக எழுந்து, ‘நீங்க சாதாரண நடிகர் நாங்க யார் தெரியுமா என்ன நினைச்சு இப்படி பேசிட்டு இருக்கீங்க என்றார். அதற்கு மாரிமுத்தோ எதையுமே யோசிக்காமல், நான் அந்த கடவுளையே நம்பாதவன். சும்மா உட்காருயா. யாருய்யா நீங்கள் எல்லாம்” என Thug பதிலை கொடுத்து அந்த ஜோதிடரை ஆஃப் செய்துவிட்டார். அவரது இந்தப் பேச்சை பார்த்த நெட்டிசன்கள் பலர் ஆதி குணசேகரன் ஃபயர் மோடில் இருக்காரு ப்பா என கூறி பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.