ஷில்லாங்: மேகாலயா மாநிலம் துராவில் உள்ள முதலமைச்சரின் முகாம் வீட்டிற்கு வெளியே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பவத்தில் 5 போலீசார் காயமடைந்தனர். அங்கு பதற்றமான நிலை காணப்படுகிறது.
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திற்கும்,நமது அண்டை நாடான வங்காள தேசத்திற்கும் இடையில், மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதிதான் மேகாலயா மாநிலம். சுமார் 300 கி.மீ. நீளமும், 100 கி.மீ. அகலமும் கொண்டது. பரப்பளவு 22,429 ச.கி.மீ. ஆகும். தெற்கு எல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. நிர்வாக வசதிக்காக இம்மாநிலம் 11 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் “ஷில்லாங்’ ஆகும்.
1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இன்றைய மேகாலயா அஸ்ஸாமின் இரண்டு மாவட்டங்களாக இருந்தது. 1960 – இல் தனி மாநிலம் வேண்டி கோரிக்கைகள் எழுந்தன. அதனால் 1970 – இல் ஐக்கிய காசி மலைகள், ஜெயந்தியா மலைகள், காரோ மலைகள் ஆகிய பகுதிகளைக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டு பாதி தன்னாட்சி வழங்கப்பட்டது. அதன்பின் 1972 – இல் மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு முழுமையான மாநிலமாக மாறியது.
2023 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்து வருகிறார்.
மேகலாவின் துராவில் முதல்வரின் முகாம் அலுவலகம் அமைந்திருக்கிறது. இங்கு இன்று மாலை மேகாலயா முதல்வர் கான்ராட் சர்மா, ACHIK, GHSMC உள்ளிட்ட சிவில் அமைப்புகனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார். ஒரு பக்கம் உள்ளே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையில், மறுபக்கம் வெளியே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 5 போலீசார் காயம் அடைந்தனர்.
முதல்வர் அலுவலகத்திற்கு வெளியே ஏராளமான கூட்டம் கூடி கற்களை வீசினார்கள். இதனால் பதற்றமான நிலை ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த பதிலடி கொடுத்த போலீசார், கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 போலீசார் காயம் அடைந்தனர்.
இந்த வன்முறை குறித்து கேள்விப்பட்டு உடனே வந்த முதல்வர் கான்ராட் சர்மா, நேராக வந்து நிலைமையை ஆய்வு செய்தார். தற்போது அங்கு சுமூகமான நிலை காணப்படுகிறது. கல் எறிந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக மேகலயாவில் பதற்றம் ஏற்பட்டது.