பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி சூர்யா ரசிகர்கள் இருவர் உயிரிழப்பு

தங்களது அபிமான நடிகர்களின் படங்கள் வெளியாகும் போதும் அவர்களது பிறந்தநாளின் போதும், தீவிரமான ரசிகர்கள் பேனர் கட்டுவது, பட்டாசு வெடிப்பது பிரம்மாண்ட கட்டவுட் வைப்பது, அதற்கு பாலபிஷேகம் செய்வது என கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கம் தான். இதை செய்யாதீர்கள் என ஒரு சில நடிகர்கள் பெயரளவில் சொன்னாலும் அதை உறுதிப்பட அவர்கள் தெரிவிப்பது இல்லை. அதனால் சில நேரங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று சூர்யாவின் பிறந்தநாளை ஆந்திராவைச் சேர்ந்த அவரது ரசிகர்கள் இருவர் கொண்டாட முயற்சி செய்தபோது உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பால்நாடு மாவட்டத்தை உள்ள மொபுலாவரிபலம் என்கிற ஊரில் உள்ள சூர்யாவின் ரசிகர்களான நகா வெங்கடேஷ் மற்றும் புலூரி சாய் என்கிற இரண்டு கல்லூரி மாணவர்கள் சூர்யாவின் பிறந்தநாள் பிளக்ஸ் பேனர் ஒன்றை கட்டுவதற்கு முயன்றனர். அப்போது பேனரில் இருந்த இரும்புக்கம்பி அருகில் சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

இதேபோல சில வருடங்களுக்கு முன் நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளுக்காக பிளக்ஸ் பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பிரபல ஹீரோக்கள் இதுபோன்று ரசிகர்கள் தங்களது பிறந்த நாட்களை ரசிகர்கள் கொண்டாடுவதை தடுக்காவிட்டாலும் கூட பாதுகாப்புடன் கொண்டாட வலியுறுத்த வேண்டுமென நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.