திருவண்ணாமலை: ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு கோவிலை சுற்றி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் குனிகாந்தூரில் செயல்பட்டு வரும் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய […]
