TVS iQube escooter – ரூ.1 லட்சம் விலையில் டிவிஎஸ் ஜக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் எப்பொழுது

பிரசத்தி பெற்ற டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் குறைந்த விலை பெற்ற வேரியண்ட் விற்பனைக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிட வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைத்து வருகின்ற ஐக்யூப் ரூ. 1.41 லட்சம் முதல் ரூ.1.57 லட்சம் வரை (ஆன்-ரோடு தமிழ்நாடு) விற்பனை செய்யப்படுகின்றது.

சமீபத்தில் FAME 2 மாணியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஏதெர் , ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கின்றது. இதனை எதிர்கொள்ளும் வகையில் புதிய மாடல் அமையலாம்.

TVS iQube Escooter

தற்பொழுது விற்பனையில் உள்ள iQube துவக்க நிலை STD வேரியண்ட் மற்றும்  iQube S இரண்டும் 3.04 kWh பேட்டரி கொண்டுள்ளது. ஆனால் டாப் மாடல் ஐக்யூப் எஸ்டி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் விற்பனையில் இல்லை இதில் 4.56 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் குறைந்த விலை மாடல் என்றாலும், 3.04 kWh பேட்டரி பெற்றதாக இருக்கலாம், ஆனால் கனெக்ட்டிவிட்டி வசதிகள், கிளஸ்ட்டர் போன்றவற்றில் மாற்றங்கள் பெற்று குறைவான வசதிகள் கொண்டிருக்கலாம். புதிய மாடல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள க்ரியோன் எலக்ட்ரிக் மாடலுடன் கூடுதலாக வரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம்.

குறைந்த விலை ஐக்யூப் அறிமுகம் செய்யப்பட்டால் ரூ.1.20 லட்சத்திற்குள் அமையலாம். மிக நேர்த்தியாக வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர் போன்ற வடிவமைப்பு ஐக்யூப் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், நாட்டின் இரண்டாவது பெரிய பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பாளராக டிவிஎஸ் மோட்டார் விளங்குகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.