Jailer: 10 நாளில் ரூ. 500 கோடி வசூலித்த ஜெயிலர்: பாக்ஸ் ஆபீஸ் கிங் ரஜினி

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ரூ. 500 கோடி வசூலித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன் லால், சிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. படம் ரிலீஸான முதல் நாளே ரூ. 72 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் 10 நாட்களில் ரூ. 500 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.வசூல் சாதனை​வசூலில் உச்சத்தை எட்டிய ஜெயிலர்?​​அமெரிக்கா​ஜெயிலர் படத்திற்கு இந்தியா தவிர்த்து அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 5 மில்லியன் டாலர்களை வசூல் செய்திருக்கிறதாம் ஜெயிலர். விஜய்யின் வாரிசு, அஜித் குமாரின் துணிவு ஆகிய படங்கள் அமெரிக்காவில் வசூல் செய்த பணத்தை ஒரே நாளில் வசூலித்துவிட்டது ஜெயிலர்.

​சாதனை​தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா பாக் ஆபீஸ்களிலும் ஜெயிலர் தொடர்ந்து புது சாதனைகளை செய்து வருகிறது. ரஜினியின் படம் இப்படி தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருவது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஜெயிலர் ரூ. 500 கோடியை கண்டிப்பாக தொடும் என ரஜினி ரசிகர்கள் தெரிவித்தது போன்றே நடந்துவிட்டது.
​சிவராஜ்குமார்​ஜெயிலர் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வந்த கன்னட நடிகரான சிவராஜ்குமார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். ரஜினியை வைத்துக் கொண்டே சிவராஜ்குமார் மாஸ் காட்டியிருக்கிறார் என விமர்சனம் எழுந்துள்ளது. ஜெயிலர் ரிலீஸுக்கு பிறகு சிவராஜ்குமாரை பார்த்தாலே, கெத்து காண்பித்துவிட்டீர்கள் ஷிவாண்ணா என ரசிகர்கள் பாராட்டுகிறார்கள்.
​நெல்சன்​ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக உழைத்த படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்சன் திலீப்குமாரோ, ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு காரணம் ரஜினி சார் தான், அவரின் பவர் தான் என்றார். ரஜினி இமயமலை பயணத்தில் இருப்பதால் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

​ரஜினியின் பவர் தான் ஜெயிலர் வெற்றிக்கு காரணம் : நெல்சன்

​ரஜினி​ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றதற்கும், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதற்கும் தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது. ரஜினியும் அப்படித் தான் தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அதனால் இனி ஒவ்வொரு பட வேலை முடிந்ததும் இமயமலைக்கு கிளம்புங்கள் தலைவா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இனி ஆண்டுதோறும் இமயமலைக்கு வருவேன் என ரஜினியும் தெரிவித்துள்ளார்.

​தலைவர் 170​ஜெயிலரை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி. அந்த படத்திற்கான லுக் டெஸ்ட்டில் கலந்து கொண்டுவிட்டு தான் இமயமலைக்கு சென்றார். போலி என்கவுன்ட்டர்களை எதிர்த்து போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினி. ஜெய்பீம் படத்தை போன்றே தலைவர் 170 படத்தையும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கவிருக்கிறார் ஞானவேல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.