அனிதா பற்றி ஆவணப்படம்.. கண்ணீர் விட்டு கலங்கிய உதயநிதி.. உணர்வுப்பூர்வமான நீட் எதிர்ப்பு மேடை!

அனிதா பற்றிய ஆவணப் படம் ஒளிபரப்பான நிலையில், அதனைப் பார்த்து உதயநிதி கண்கலங்கினார்.

மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அரியலூர் மாணவி அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை பல மாணவர்களை நீட் பலி கொண்டுள்ளது. இதனால் நீட் தேர்வு வேண்டாம் என்பது

, அதிமுக என முக்கிய கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. மேலும், நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டில் உணர்ப்பூர்வமான ஒரு விஷயமாகவே அணுகப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி அதிமுக, திமுக என இரண்டு அரசுகளும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றின. ஆனால், இதுவரை நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை. சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் நீட்டில் வென்ற மாணவரின் பெற்றோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “நீட் விலக்கு மசோதாவில் எப்போதும் கையெழுத்திட மாட்டேன்” என பேசினார். இதற்கு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கண்டன குரல்களை பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். நீட்டிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை போராடி, மருத்துவர் கனவு பொய்த்ததால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட அரியலூர் மாணவி அனிதா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பானது.

காணொலியில் அனிதா பேசும்போது உணர்ச்சி வசப்பட்ட அமைச்சர் உதயநிதி கண்ணீர் விட்டு அழுதார். கட்டுப்படுத்த முயன்றபோதும் கண்களில் நீர் ததும்பியதால், பலமுறை துடைத்துகொண்டார் உதயநிதி. அதன்பிறகு சிறிது நேரம் சோகமாகவே இருந்தார். இதனால் மாநாட்டு மேடையில் உணர்ச்சிவயப்பட்ட சூழல் நிலவியது.

சில நாட்களுக்கு முன்பு ஊடகத்திடம் பேசிய உதயநிதி, நீட் தேர்வு விலக்குக்கு தானே முழு பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், இது அனைவரின் பொறுப்பாக மாற வேண்டும், மக்கள் போராட்டமாக மாற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.