மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்களை பெறுவீர்கள்.. பாஜக அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

மும்பை:
“மீன் சாப்பிட்டால் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இருப்பதை போன்ற கண்களை பெறுவீர்கள்” என்று மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக அமைச்சர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிராவில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் விஜய்குமார் காவித். இவர் நந்தூர்பார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “மக்களே.. உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி என மாமிச வகைகளை அதிகம் சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியம் கெட்டுப் போகிறது. ஆனால், மீன் அப்படி அல்ல. மீன் இறைச்சியில் கொழுப்பு கிடையாது என்பதால் அவற்றை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

“குடையை எடுடி மாலா”.. இன்று முதல் தமிழக்தில் மூன்று நாட்களுக்கு கொளுத்த போகும் மழை.. ஜில் அப்டேட்

நீங்கள் பிறரை கவர வேண்டுமானாலும் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும். ஏன் தெரியுமா..? நடிகை ஐஸ்வர்யா ராய் தினமும் மீன் சாப்பிடுவார். அவர் மங்களூரில் கடலுக்கு அருகே வசித்து வந்தவர். அதனால் அவரது உணவில் தினமும் மீன் இருக்கும். அப்படி அவர் மீன் சாப்பிட்டதால் தான் அவரது கண்கள் அத்தனை கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கின்றன. எனவே, நீங்களும் மீன் சாப்பிட்டால் ஐஸ்வர்யா ராய் போன்ற கண்கள் உங்களுக்கும் கிடைக்கும். உங்கள் கண்கள் பிறரை கவர்ந்திழுக்கும்” என அமைச்சர் விஜய்குமார் காவித் பேசினார்.

‘மாமன்னன்’ மிகவும் அருமையான படம்.. அதிலும் ஃபகத் பாசில் கேரக்டர்.. அன்புமணி சொல்றத கேளுங்க

இந்நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. “ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு ஒரு நடிகையின் கண்களை வர்ணித்து பேசுவது சரியல்ல” எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.