வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சியோல் : தென்கொரியா பெண் 1600 கி.மீ., துாரம் பயணம் செய்து உத்திரபிரதேச மாநில வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
உத்திரபிரதேசத்தின் ஜாஷகான்பூரை சேர்ந்த சுக்ஜித் சிங் நான்கு ஆண்டுகளுக்கு முன் தென்கொரியாவுக்கு வேலை தேடி சென்றார். அங்கு அவருக்கு பூசன் நகரில் காபி கடையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதே கடையில் தென்கொரிய பெண் கிம் போ-நீ 23, பணம் செலுத்தும் கவுன்ட்டரில் அதிகாரியாக பணிபுரிந்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது.
சுக்ஜித் சிங் கூறியதாவது: பூசன் நகரில் இருந்தபோது கிம்மை சந்தித்தேன். நான் கொரிய மொழியை கற்று கொண்டிருந்தேன். அதனால் அவருடன் எளிதில் உரையாட முடிந்தது. நான்காண்டுகளாக எங்களுக்கு இடையே லிவ்-இன் உறவு முறை இருந்தது. நான் இந்தியா வந்ததும் இரண்டு மாதங்களுக்கு பின் கிம்மும் என்னை பின்தொடர்ந்து இந்தியா வந்து விட்டார் என்றார்.
இருவரும் உள்ளூரில் உள்ள குருத்வாராவில் சீக்கிய பாரம்பரியத்தின்படி திருமணம் செய்து கொண்டனர். கணவர் சிங், அவருடைய குடும்பத்தினருடன் பண்ணை இல்லத்தில் ஒன்றாக கிம் வசித்து வருகிறார்.
மூன்று மாத சுற்றுலா விசாவில் இந்தியா வந்த கிம், ஒரு மாதம் விசா நீட்டிப்பு செய்துள்ளார். சில வாரங்களில் சொந்த நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். மூன்று மாதங்கள் கழித்து சுக்ஜித் சிங்கும் கொரியா செல்வார்.
இந்திய கலாசார விஷயங்களை கிம் விரும்புகிறார். அதிலும் பஞ்சாபி பாடல்களை விரும்பி கேட்கிறார். உள்ளூர் மொழி தெரியாவிட்டாலும் எங்கள் இசையை அவர் ரசிக்கிறார். அவருக்கு ஒவ்வொன்றும் புதிதாக உள்ளது என கூறும் சிங், இருவரும் தென்கொரியாவுக்கு திரும்பி அந்நாட்டிலேயே வசிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement