மைசூரு: ”நம்மிடம் 135 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கும் போது, எதற்காக ஆப்பரேஷன் கை திட்டப்படி, மாற்று கட்சியினரை இழுக்க வேண்டும்,” என காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் அதிருப்தி தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் 20 இடங்களை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ஆப்பரேஷன் கை’ திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். இதன்படி, பா.ஜ., – ம.ஜ.த., வை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர் காங்கிரசில் இணைய தயாராக உள்ளனர்.
ஆனால், காங்கிரசின் இத்திட்டத்துக்கு, அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தன்வீர் செய்ட் மைசூரில் நேற்று கூறியதாவது:
ஆப்பரேஷன் கை நடத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு இல்லை. மக்கள் எங்களுக்கு 135 இடங்களை கொடுத்துள்ளனர். ஏற்கனவே கட்சி தாவல் சட்டம் உள்ளதால், இந்த ஆப்பரேஷன் தேவையில்லை. வர விரும்பும் மாற்று கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்து விட்டு தான் வர வேண்டும்.
அப்படியே ராஜினாமா செய்தாலும், வாக்காளர்கள் மீண்டும் அவரை தேர்வு செய்வார்களா என்பது தெரியாது. தற்போதைய சூழ்நிலையில் நிலைமை சரியில்லை. எனவே, தான் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். ஆப்பரேஷன் தாமரையை கொண்டு வந்ததே பா.ஜ., தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement