லே இந்திய ஒற்றுமை யாத்திரையின் தொடர்ச்சி ராகுல் காந்தியின் லடாக் பயணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4 ஆயிரம் கி.மீ.க்கு நடைப்பயணம் மேற்கொண்டார். கடந்த 17 ஆம் தேதி ராகுல் காந்தி 2 நாள் பயணமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் உள லே பகுதிக்குச் சென்றார். பிறகு அவர் பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு, கார்கில் பகுதிகளுக்குச் செல்வதற்காக மேலும் 4 நாட்களுக்கு தனது […]
