100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறந்த படம்.. 'கடைசி விவசாயி' படம் பார்த்து எமோஷனலான பிரபல இயக்குனர்.!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்பார்த்த 69வது தேசிய விருதுகள் குறித்தாக அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதில் சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப்படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கோலிவுட் திரையுலகினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கடைசி விவசாயி’. விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்திருந்தார். விமர்சனரீதியாக இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் சிறந்த தமிழ் படமாக ‘கடைசி விவசாயி’ அறிவிக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் முன்னதாக இந்தப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மிஷ்கின் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய இயக்குனர் மிஷ்கின், கடந்த நூறு ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச்சிறப்பான படம் என இந்தப்படத்தை சொல்வேன். எனக்கு பராசக்தி, சேது, தங்கப்பதக்கம், அன்பே வா, உதிரி பூக்கள் உள்ளிட்ட பல படங்கள் பிடிக்கும்.

ஸ்ரீதர், பாலு மகேந்திரா, பாலச்சந்தர் மற்றும் நண்பர்கள் வெற்றிமாறன், ராம் உள்ளிட்ட இயக்குனர்களுடைய அனைத்து படங்களும் பிடிக்கும். நானும் ஒரு பத்து படங்கள் எடுத்துள்ளேன். இவை எல்லாவற்றையும் விட ‘கடைசி விவசாயி’ படத்தை மிகச்சிறப்பான படமென்று சொல்வேன். அனைவரும் குடும்பத்தோடு இந்தப்படத்தை பார்க்க வேண்டும். வாழ்க்கையில் அனைவரும் பார்க்க வேண்டிய முக்கியமான படம் என்று நம்முடைய குழந்தைகளிடம் சொல்ல வேண்டும்.

அப்பாக்கிட்ட இல்லை, எனக்கு கிடைச்சதும்.. தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.!

இந்திய மண்ணுக்காக, மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான படம். இப்படத்தில் நடித்துள்ள முதியவரை பார்க்கும் போது எனக்கு க்ளின்ட் ஈஸ்ட்வுட் நினைவுக்கு வந்தார். இப்படத்தில் க்ளின்ட் ஈஸ்ட்வுட் நடித்திருந்தால் 20 ஆஸ்கர் விருதுகள் கிடைத்திருக்கும். கடந்த இருபது ஆண்டுகளில் என்ன மாதிரியான படம் எடுத்து வைச்சு இருக்காங்க?

எவ்வளவு பொறுக்கி படம், பேடி படம், கேவலமான படங்கள் பார்த்துள்ளோம். அதையெல்லாம் பெருசா கொண்டாடி இருக்கோம். அப்படி அந்த கேவலங்கள் எல்லாத்தையும் கொண்டாடிய நம்ம இந்த படத்தை கொண்டாடலைனா மனுஷங்களே இல்ல. இந்தப்படத்தோட இயக்குனர் மணிகண்டனை கொண்டாடியே ஆக வேண்டும்.

நான் விஷுவலாக பெரிய பிலிம் மேக்கர் என சொல்வாங்க. ஆனா அப்படி எல்லாம் கிடையாது. மணிகண்டன் ரொம்ப எதார்த்தமா விஷுவல் பண்ணிருக்கான். விஜய் சேதுபதியை ஆரத்தழுவி பாராட்ட வேண்டும். இயக்குனர் மணிகண்டனுக்கு விழா எடுக்க வேண்டும் என பாராட்டி தள்ளியிருந்தார். இந்நிலையில் தற்போது ‘கடைசி விவசாயி’ தேசிய விருது வென்றுள்ளதை தொடர்ந்து, படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் பேசியுள பழைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

69வது தேசிய திரைப்பட விருதுகள்: கவனிக்கப்படாத ஜெய் பீம், கர்ணன், சார்பட்டா படங்கள்… ரசிகர்கள் அப்செட்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.