சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பேருந்துகளை சிந்தாதிரிப்பேட்டை சென்று வர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை இனி சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதனால் சென்னை பார்க் நிலையத்தில் இந்த ரயிலைப் பிடிக்க சென்ட்ரல் வரும் பயணிகளுக்குச் சிரமம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா சாலையிலிருந்து சென்ட்ரல் செல்லும் அனைத்து பேருந்துகளையும் சிந்தாதிரிப்பேட்டை சென்று வரும் வகையில் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் […]
