Vijay: எனக்கு விஜய் தான் பிடிக்கும்..இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் படத்திற்கு படம் வசூலில் சாதனை செய்து வருபவர் தான் விஜய். தளபதி என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டு வரும் விஜய்யின் வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.அவர் படங்கள் சூப்பராக இருந்தாலும் சுமாராக இருந்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது.

எனவே விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு இவரின் படங்கள் வெற்றிபெற்று வருவதால் விஜய்யின் கால்ஷீட்டை வாங்க பல தயாரிப்பாளர்கள் தவம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார்.

பிடித்த நடிகர் விஜய்

இப்படத்தை AGS நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார். இதையடுத்து இப்படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக வழங்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. அந்த அளவிற்கு விஜய்யின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருந்து வருகின்றது.

Vidaamuyarchi update: விடாமுயற்சி எப்போது துவங்கும் ? படம் எப்படி இருக்கும் ? தயாரிப்பாளர் சொன்ன தரமான அப்டேட்..!

இது ஒருபக்கம் இருக்க லியோ படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அப்படி செய்தால் விஜய்யின் மார்க்கெட் மேலும் ஒரு புது உச்சத்தை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய முழுவதும், உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

ரஹானே பதில்

அதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு நிகழ்வு நடைபெற்று இருக்கின்றது. என்னவென்றால் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரஹானே தனக்கு தமிழ் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடினார் ரஹானே. அதன் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு கம்பாக் கொடுத்து துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மதன் கௌரிக்கு பேட்டி கொடுத்த அவர் பல விஷயங்களை பற்றி ஜாலியாக பேசினார். அப்போது தான் அவரிடம் உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என கேட்கப்பட்டது. அதற்கு ரஹானே, விஜய் என பதிலளித்தார். இதனை விஜய் ரசிகர்கள் தற்போது ட்ரெண்டாக்கி வருகின்றனர். நடந்து முடிந்த ஐ.பி எல் போட்டியில் CSK கோப்பையை வென்ற பிறகு தமிழ்நாடு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரஹானே தற்போது விஜய் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.