திருப்பதியில் மிகப்பெரிய மாற்றம்: தேவஸ்தானத்தின் முழு கன்ட்ரோலும் இனிமே இவங்கக்கிட்டதான் – ஜெகன் போட்ட ஆர்டர்!

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதிஉலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வது அனைவரும் அறிந்த விஷயம்தான். திருமலை திருப்பதிக்கு சாலை மார்க்கமாகவும், மலைப்பாதைகள் வழியாக பாத யாத்திரையாகவும் ஏராளமான பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.திருமலை திருப்பதி தேவஸ்தானம்திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பணக்கார கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டி தொடர்ந்து இரண்டு முறையாக பதவி வகித்து வந்தார்.
​ சிங்கப்பூர் அரசு அதிகாரியை சரமாரியாக தாக்கிய இந்திய பெண்… தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி தண்டனை!​பூமனா கருணாகர் ரெட்டி
அவரது பதவிக்காலம் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகர் ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தான ஆட்சி மன்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10 ஆம் தேதி டிடிடி தலைவராக பொறுப்பேற்றார். கருணாகர் ரெட்டி ஏற்கெனவே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக இருந்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டிஇந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியத்தில் 24 உறுப்பினர்களை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்களில் செவெல்லா எம்பி ரஞ்சித் ரெட்டியின் மனைவி கடம் சீதா ரெட்டியும் இடம்பெற்றுள்ளார்.

​ நெருங்கும் வடகிழக்கு பருவமழை… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய மின்வாரியம்!​ஊழல் குற்றவாளிகள்
TTD குழுவானது புகழ்பெற்ற திருப்பதி கோவிலின் செயல்பாடுகளை ஒரு சுயாதீன ஆளும் குழுவாக நிர்வகித்து வருவதால் இந்த அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அதிகம் விரும்பப்படும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் இந்த புதிய அறங்காவலர் குழுவில் ஊழல் குற்றவாளிகள் இருவரது பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சரத் ரெட்டி, கேதன் தேசாய்டெல்லி மதுபான ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட சரத் சந்திர ரெட்டி மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் (எம்சிஐ) உறுப்பினராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட டாக்டர் கேதன் தேசாய் ஆகிய இருவரின் பெயர்கள் அறங்காவலர் குழு உறுபினர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஊழல் குற்றவாளிகள் 2 பேர் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
​ ஜப்பானின் ‘ஸ்மார்ட் லேண்டர்’ நிலவு திட்டம் ஒத்திவைப்பு… மோசமான வானிலையால் அதிரடி முடிவு!​எம்பியின் மருமகன்
சரத் ​​சந்திர ரெட்டி, பிரபல மருந்து நிறுவனமான அரபிந்தோ பார்மாவின் இயக்குநரும், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ராஜ்யசபா எம்பி விஜயசாய் ரெட்டியின் மருமகன் ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை சரத் சந்திர ரெட்டியை டெல்லி மதுக் கொள்கை ஊழல் வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் (PMLA) கைது செய்தது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்இதேபோல் கேதன் தேசாய் குஜராத்தைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர். 2010 ஆம் ஆண்டில், பஞ்சாபைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிக்கு முறையான உள்கட்டமைப்பு இல்லாமல் புதிய மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாகக் கூறி சிபிஐயால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் ஊழல் குற்றவாளிகள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

​ சென்னை டூ திருப்பதி: லட்டு மாதிரி கிடைச்ச வந்தே பாரத்… ஹைதராபாத்துக்கு பெத்த ஜாக்பாட்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.