கான்பெரா: ஆஸ்திரேலியாவில் நடந்த பயிற்சியின்போது, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அந்நாட்டைச் சேர்ந்த மூன்று கடற்படை வீரர்கள் பலியாகினர்; 23 பேர் காயமடைந்தனர்.
பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியாவில், அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்டவை கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானத்தில், அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மெல்விலே தீவில் கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், விமானத்தின் இடிபாடுகளில் சிக்கித் தவித்த வீரர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் பயணித்த மூன்று கடற்படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன், 23 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கூறுகையில், ”இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். இந்த இக்கட்டான சூழலில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement