வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
விஜயவாடா: ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த வாகனச் சோதனையின்போது, 9.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவின் போலபள்ளி சுங்கச்சாவடி பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், நம் அண்டை நாடான இலங்கை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட, 4.3 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்ததுடன், கார் டிரைவரையும் கைது செய்தனர்.
![]() |
டிரைவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது கூடுதலாக, 6.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளையும் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட கடத்தல் தங்கத்தின் மொத்த மதிப்பு, 6.4 கோடி ரூபாய் என சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நம் அண்டை நாடான வங்கதேசத்தின் எல்லையில் இருந்து, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திற்கு வந்த ஒரு லாரியை, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 3.12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்ததுடன், டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement