இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிகெட் பயணத்தை தொடங்க இருக்கிறது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய அணியில் அடிக்கடி பிளேயிங் லெவன் மாறிக் கொண்டிருப்பதற்கு பதில் அளித்தார். அவர் பேசும்போது, இந்திய அணியில் 4 மற்றும் 5 ஆம் இடத்தில் விளையாடும் வீரர்கள் நிலையாக இல்லாமல் இருப்பது ஒரு பிரச்சனையாகவே இருக்கிறது. அது எங்களுக்கும் தெரியும். ஆனால், 18, 20 மாதங்களுக்கு முன்பு இதே கேள்வியைக் கேட்டிருந்தால் நிச்சயமாக அதற்கான விடை என்னிடம் இருந்தது.
Melbourne__82) August 29, 2023
ஏனென்றால், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சிறப்பாக பொருந்தியும் இருந்தனர். ஆனால் துருதிஷ்டவசமாக மூன்று பேரும் ஒரே காலக்கட்டத்தில் காயமடைந்தனர். அவர்களின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் ஸ்ரேயாஸ் அய்யர் இப்போது காயத்தில் முழுமையாக குணமடைந்துவிட்டார். அவர் சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராக இருக்கிறார். கே.எல்.ராகுல் இன்னும் குணமாகவில்லை. ஆசிய கோப்பையில் முதல் இரு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என தெரிவித்தார்.
@BCCI) August 29, 2023
பயிற்சியில் பங்கேற்ற ஸ்ரேயாஸ் அய்யர் முழுமையாக பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்தார். அவரின் வருகை ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது என தெரிவித்தார். இம்முறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. அங்கு பாதுகாப்பு பிரச்சனை இருப்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் இலங்கைக்கு மாற்றப்பட்டன. பின்னர் ஒரு சில போட்டிகளைத் தவிர அனைத்து போட்டிகளும் இலங்கைலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா முதல் போட்டியில் விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் மோத இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.