நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர் உலவி நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வு தொடர்பான விவரங்களை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ரோவர் கலனில் உள்ள Laser-induced Breakdown Spectroscope – LIBS ஆய்வு கருவி நிலவின் மேற்பரப்பில் ஆக்சிஜன், சல்பர் ஆகிய தனிமங்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது. தவிர, […]
