கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டு அவருக்கு எதிராக நேரடியாக திமுக போட்டியிட்டால் தாம் ஆதரிக்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். இன்று கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒஉர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம், ”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. அதாவது 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குத்தான் பெரும்பாலும் ஒதுக்கியது. திமுக தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டது […]
