சென்னை: வரி முறைகேடு மற்றும் மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக, வருமான வரித்துறை சென்னை உள்பட 40 இடங்களில் நேற்று முதல் ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டு இன்று 2வது நாளாகவும் தொடர்கிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மத்தியஅரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, என்ஐஏ, […]
