ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்கத்தை அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளது. இன்று காலை தங்க பதக்கத்துடன் தொடங்கிய இந்தியா அடுத்தடுத்து பதக்கங்களை வென்று வருகிறது. அந்த வகையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் ஐஸ்வாரி தோமர் வெண்கல பதகக்கம் வென்றார். 228.8 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பெற்ற தோமர் வெண்கலம் வென்றார். இந்த பிரிவில் சீனா தங்க பதக்கம் வென்றது. தென்கொரியா 251.3 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது.
Related Tags :