போபால்: நாடு முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மத்திய பிரதேசத்தில் நாதியா மாவட்டத்தில் விநாயகர் சிலைகள், 10 நாட்கள் கடந்த நிலையில் இன்று(செப்.,28) குளத்தில் கரைக்க கொண்டு சென்றனர்.
குளத்தில் சிலைகளைக் கரைக்கும் போது 7 சிறுவர்கள் நீரில் மூழ்கினர். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் 3 சிறுவர்களை மீட்டனர். எனினும் 3 சிறுமிகள் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement