சென்னை: நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்த சொத்து அபகரிக்கப்பட்ட புகாரில் இன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாஜக நிர்வாகியும், பில்டருமான அழகப்பன்மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கமல் உள்பட பல நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கவுதமி. இவர் திருமணமாகி விவகாரத்து பெற்றவர். ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் பல ஆண்டுகளாக நடிகர் கமல்ஹாசனின் தாலி கட்டாத […]
