அண்மையில் சீனாவின் ஹாங்சோநகரில் நடைபெற்ற 4வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற இலங்கை பரா விளையாட்டு வீரர்களின் குழு திங்கட்கிழமை (ஒக்டோபர் 30) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் நாடு திரும்பியது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கெளரவ ரோஹன திஸாநாயக்க, விளையாட்டு பணிப்பகத்தின் கேணல் விளையாட்டு கேணல் எச்.எம்.எஸ்.பீ.எஸ் டி சில்வா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இராணுவ ஒலிம்பிக் குழாமின் உதவிச் செயலாளர் லெப்டினன் கேணல் டி.டி விக்கிரமசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் பிரதிநிதிகள் இராணுவ விளையாட்டு வீரர்களை வரவேற்க அங்கு கூடியிருந்தனர்.
2023 ஆண்டின் 4 வது ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 6 பரா தடகள வீரர்கள் பங்குபற்றியதுடன் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II கேஏ சமித்த துலான் பரா ஈட்டி எறிதல் எப்-44 நிகழ்வில் (தூரம் – 64.09 மீ) வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன் ஆண்களுக்கான பரா தட்டு எறிதல் நிகழ்வில் எப்- 63 (தூரம் – 14.15 மீ) இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சாஜன்ட் எச்.ஜி பாலித பண்டார வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.