2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் நேற்று (02) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் அபார தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 357 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக Shubman Gill 92 ஓட்டங்களையும், ஏசையவ Virat Kohli 88 ஓட்டங்களையும், Shreyas Iyer 82 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய டில்ஷான் மதுஷங்க 5 விக்கெட்டுகளையும், துஷ்மந்த சமிர ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 55 ஓட்டங்களைப் பெற்றதோடு, அதன்படி இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் கசுன் ராஜித 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மத்தியூஸ் 12 ஓட்டங்களையும், மஹிஷ் தீக்ஷன 12 ஓட்டங்களையும், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் எவரும் 2 ஓட்டங்களைக்கூட பெறவில்லை.