சிக்கமகளூரு : ஸ்ரீராமசேனை சார்பில் இன்று ஊர்வலம் நடக்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிக்கமகளூரு மாவட்டத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பு சார்பில் தத்தமாலா விழிப்புணர்வு யாத்திரையின் ஒரு பகுதியாக, இன்று காலை நகரின் சங்கர மடத்தில் இருந்து எம்.ஜி., சாலை வழியாக ஆசாத் பூங்கா வரை ஊர்வலம் நடக்கிறது. இதில், அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பங்கேற்கிறார்.
இவருடன் மாலை அணிந்த பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஆறு டி.எஸ்.பி.,க்கள், 80 சப் – இன்ஸ்பெக்டர்கள், 141 ஏ.எஸ்.ஐ.,க்கள், 956 தலைமை ஏட்டுகள், 250 ஊர்க்காவல் படையினர், 8 கே.எஸ்.ஆர்.பி., படையினர், 12 ஆயுதம் ஏந்திய ரிசர்வ் படை பிரிவினர் உட்பட 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்துடன், மாவட்டத்தில் 26 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவை ஒட்டி, நேற்று முதல் 6ம் தேதி வரை காலை 10:00 மணி வரை சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement