பெங்களூரு கர்நாடகாவில் ஆலும் கட்சியான காங்கிரசில் பிளவு ஏற்படுத்த ம ஜ த தலைவர் குமாரசாமி முயல்வதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக வருவதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே போட்டி காணப்பட்டது. டில்லியில் இரு தலைவர்களும் முகாமிட்டு கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தனர். பிறகு கட்சி மேலிட முடிவின்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கிறார். துணை முதல்வரால டி.கே. சிவக்குமார் […]
