சென்னை: தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எழும்பூர் மருத்துவமனைக்கு நீர் தயாரிக்கும் இயந்திரத்தை வழங்கனிர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள், மருத்துவர்கள் உடனிருந்தனர். மூத்த நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு முதலமைச்சர்கள் ஸ்டாலின், பினராயி விஜயன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். மேலும், கமல் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. […]
