சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. ராஜூ முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கார்த்தி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், ஜப்பான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கார்த்தியுடன் விஷால், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் ஒன்றாக மேடையேறினர். அப்போது விஷால் தான் பிரச்சினையே என கார்த்தியும் ஆர்யாவும் கலாய்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
