
சூர்யாவை காயப்படுத்த விரும்பாத பாலா!
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கவிருந்த படம் 'வணங்கான்'. ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டதாக பாலா, சூர்யா என இருவருமே அறிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கின்றார். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல்வேறு கட்டமாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதனை சென்னை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். ஆனால், இந்த போஸ்டரை நடிகர் சூர்யாவின் தெருவில் மட்டும் ஒட்ட வேண்டாம், இது அவரை காயப்படுத்த வாய்ப்புள்ளது என பாலா தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.